வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் அரசாங்கம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்காக மட்டும் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
அண்மைக் காலமாக வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள அதிகளவு கிராக்கி நிலவி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் கடவுச்சீட்டு வழங்குவதற்கு நிலவிய கால தாமதம் காரணமாக இவ்வாறு தற்பொழுது மக்கள் வரிசையில் காத்திருக்க நேரிட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு தொகுதி வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளும் முறையில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.