அதிக எண்ணிக்கையிலானவர்கள் சட்டவிரோதமாக சுவிட்சர்லாந்து வழியாக ஜெர்மனிக்குள் பிரவேசித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் ஜெர்மனிக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்தவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் சுவிட்சர்லாந்து வழியாக பிரவேசித்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
ஜெர்மனிய மத்திய போலீசார் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளனர்
இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் 53410 பேர் சட்டவிரோதமான முறையில் ஜெர்மனிக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சித்தவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் சுவிட்சர்லாந்து எல்லை வழியாக ஜெர்மனிக்குள் பிரவேசிக்க முயற்சித்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசிப்பதனை தடுக்கும் நோக்கில் ஜெர்மனிய அரசாங்கம் எல்லை பகுதிகளை பலப்படுத்தியது.
கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் சுவிட்சர்லாந்து எல்லை வழியாக ஜெர்மனிக்குள் பிரவேசிக்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.