கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்றைய தினமும் பதற்ற நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய விமானமொன்றில் குண்டு இருப்பதாக வெளியான தகவல்களை அடுத்து இந்த பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
விமானத்தில் குண்டு இருப்பதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் 108 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களும் பயணம் செய்துள்ளனர்.
குண்டுப் பீதி காரணமாக இந்தியாவின் பல விமானங்கள் பல நாடுகளில் இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.
அந்த வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்திலும் இதற்கு முன்னர் சில சந்தர்ப்பங்களில் விமானங்கள் சோதனையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.