வடக்கு காசாவில் இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதல்களில் கடந்த 24 நாட்களில் ஆயிரம் பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய படையினர் பாரிய அளவில் வான் தாக்குதல்களை நடத்தி இருந்தனர்.
இஸ்ரேலிய படையினர், மூலோபாய ரீதியாக காசாவில் சில பகுதிகளிலிருந்து பின் நகர்ந்து இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
அண்மைய நாட்களாக இஸ்ரேல் படையினர் காசா மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த 24 நாட்களில் ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அதிக எண்ணிக்கையிலானவர்கள் காணாமல் போய் உள்ளதாகவும் இவர்கள் கட்டிட இடுப்பாடுகளில் சிக்கி இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.