மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென சுவிட்சர்லாந்து கோரிக்கை விடுத்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் இக்னேசியோ காசீஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் பேரவை நான்கு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகளை விடுதலை செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் வலியுறுத்தி இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.