ஹிஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவராக ஷியா மதத் தலைவரான நயிம் காசீம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சுமார் ஒரு மாத காலத்திற்கு முன்னதாக ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நசரல்லாஹ் வான் தாக்குதல் காரணமாக உயிரிழந்தார்.
ஹிஸ்புல்லா இயக்கத்தின் சிரேஸ்ட பேரவை காசீமை இயக்கத்தின் பொதுச் செயலாளராக அறிவித்துள்ளது.
அண்மைய நாட்களாக இஸ்ரேலிய படையினர் ஹிஸ்புல்லா இயக்கம் மீது தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய படையினரின் தாக்குதல்களில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காசீம் நீண்ட காலமாக ஹிஸ்புல்லா இயக்கத்தின் இரண்டாம் நிலைத் தலைவர்களில் ஒருவராக கடமையாற்றியுள்ளார் என்பதுடன் நஸ்ரல்லாவின் நெருங்கிய சகா என்பது குறிப்பிடத்தக்கது.