சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் முன்பக்க ஜன்னல் கண்ணாடி (காற்றுத்தடுப்பு கண்ணாடி) வெடித்துள்ளது.
நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது இவ்வாறு விமானம் விமானத்தின் முன்பக்க ஜன்னல் பகுதியில் வெடிப்பு ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
SQ636 என்ற விமானத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூரின் ச்சான்கீ விமான நிலையத்திலிருந்து ஜப்பானின் டோக்கியோ நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது இவ்வாறு ஜன்னல் கண்ணாடி வெடித்துள்ளது.
இந்த விமானத்தில் 266 பயணிகளும் விமான பணியாளர்களும் பயணித்துள்ளனர்.
டோக்கியோவின் ஹென்டெடா விமான நிலையத்தில் காலை 6:20 மணிக்கு தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது.
நடுவானில் விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக விமானம் அவசரமாக தாய்வானுக்கு திசை திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.