ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைச்சுப் பதவி வழங்கினால் அது குறித்து கவனம் செலுத்தத் தயார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவி ஏற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டால் அது குறித்து ஆராய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்னதாக தற்போதைய ஜனாதிபதி அனுரவுடன் யாழ்ப்பாணத்தில் மே தினக் கூட்டமொன்றில் சிகப்பு பட்டி அணிந்து கொண்ட புகைப்படம் தம்மிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவிகளை இலக்கு வைத்து அவ்வாறு புகைப்படம் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வரையில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதில்லை என்ற ஓர் நிலைப்பாடு கட்சியில் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 1966ம் ஆண்டில் தமது கட்சி அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளது என சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
சந்தர்ப்பம் ஏற்பட்டால் அமைச்சுப் பதவி வகிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.