ரஷ்ய அரசாங்கம் உலகின் முதல் நிலை தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தின் மீது பாரியளவு தொகை அபராதம் விதித்துள்ளது.
ரஷ்யாவிற்கு ஆதரவான யூடிப் அலைவரிசைகளை முடக்கியதற்காக கூகுள் நிறுவனம் மீது ஏற்கனவே ரஷ்யா அபராதம் விதித்திருந்தது.
இந்த அபராத தொகையை செலுத்த தவறியதன் காரணமாக மேலும் கூடுதல் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகை எண்ணிக்கையில் கூற முடியாத அளவிற்கு பெரிய தொகை என தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 20 டெஸ்லியன் டாலர்கள் அல்லது 20 பில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியன் டாலர்கள் இவ்வாறு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் மொத்த சந்தை பெறுமதி இரண்டு ட்ரில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான ஒரு பின்னணியில் மிகப் பெரிய தொகை அபராதமாக கூகுள் நிறுவனம் மீது ரஷ்யா விதித்துள்ளது.