சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பிராந்திய பணிப்பாளர் கிருஸ்ணா ஶ்ரீனிவாசன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணையுடனான திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக புதிய அரசாங்கம் உறுதி வழங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அரச வருமானம் மற்றும் கடன் தொடர்பான இலக்குகள் குறித்துது அரசாங்கம் இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நல்ல முன்னேற்றத்தை அவதானிக்க முடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்ட மீளாய்விற்காக சர்வதேச நாணய நிதியம் மீண்டும் இலங்கைக்கு விரைவில் விஜயம் செய்ய உள்ளதாக ஶ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.