அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் மீது சுவிட்சர்லாந்து பெண் ஒருவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
கடந்த 1993ம் ஆண்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என முன்னாள் சுவிட்சர்லாந்து அழகி பியட்ரிஸ் கியுல் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் வைத்து ட்ராம்ப் தம்மை இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என குற்றம் சுமத்தியுள்ளார்.
காபி குடிப்பதற்காக அழைத்து தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்த ட்ராம்ப் முயற்சித்தார் எனவும் தமது உயரம் காரணமாக தப்பித்துக்கொண்டதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
தமக்கு 22 வயது இருக்கும் போது இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற அழகிப் போட்டியொன்றில் பங்கேற்க சென்றிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.