ஸ்பெய்னில் மழை வெள்ளம் காரணமாக சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஸ்பெய்னின் வெலென்சியா பகுதியில் இந்த அனர்த்தம் பதிவாகியுள்ளது.
சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக ஸ்பெய்னில் நடைபெறவிருந்த பிரபல மோட்டார் பந்தயப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
திடீரென வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்பட்ட போதிலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.