இலங்கையில் சட்டவிரோதமான முறையில் தங்கி இருக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வீசா இன்றி பல்வேறு காரணங்களுக்காக இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டு பிரஜைகளை அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட உள்ளது.
இவ்வாறு விசா இன்றி தங்கி இருக்கும் வெளிநாட்டு பிரஜைகள் அடையாளம் காணப்பட்டு நாடு கடத்தப்பட உள்ளனர்.
இதன்படி வீசா இன்றி நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு குடி வரவு குடி அகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல், பலஸ்தீனம், இந்தியா, ரஷ்யா, மியன்மார், நைஜீரியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பலர் வீசா இன்றி இலங்கையில் தங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினர் தகவல்களை கண்டறிந்துள்ளனர்.
இலங்கையில் சட்டவிரோதமான முறையில் தங்கி இருந்து ஹோட்டல்களை நடத்திச் செல்லும் வெளிநாட்டவர்கள் தொடர்பிலும் தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.