இலங்கையில் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்காக காத்திருப்போருக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஒன்லைன் முறையின் மூலம் வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கு நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைமை விரைவில் அமுல்படுத்தப்பட உள்ளதா குடிவரவு குடி அகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பீ பிரிவு வெற்று கடவுச்சீட்டுக்கள் சுமார் 50,000 கிடைக்க பெற்றுள்ளதா அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதியில் மேலும் ஒரு லட்சம் கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப்பெறும் எனவும் டிசம்பர் மாதத்தில் ஒன்றரை லட்சம் வெற்று கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் சுமார் ஏழரை லட்சம் கடவுச்சீட்டுக்கள் கிடைக்க பெறும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ள காத்திருப்போர் முன்கூட்டியே தங்களை பதிவு செய்து கொண்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.