சுவிட்சர்லாந்திற்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எடெல்வைஸ் (Edelweiss) என்ற விமான சேவை நிறுவனம் இந்த சேவையை ஆரம்பித்துள்ளது.
இந்த விமான சேவை நிறுவனத்தின் விமானத்தின் ஊடாக நேற்றைய தினம் சுவிட்சர்லாந்திலிருந்து 251 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையம் சென்றடைந்தனர்.
குளிர்காலத்தைத் தொடர்ந்து சூரிச் மற்றும் கட்டுநாயக்கவிற்கு இடையில் இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எடெல்வைஸ் விமான சேவை நிறுவனத்தின் WK68 என்ற ஏ330 விமானம் இவ்வாறு இலங்கையை சென்றடைந்துள்ளது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த விமான சேவை நிறுவனத்தின் விமானம் கட்டுநாயக்க செல்வதுடன் அது மாலை தீவின் தலைநகர் ஊடாக மீண்டும் அதே தினத்தில் சுவிட்சர்லாந்து திரும்புகின்றது.
இந்த விமான சேவை நிறுவனத்தின் விமானங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்திற்கு இரண்டு தடவைகள் இலங்கை சுவிட்சர்லாந்துக்கு இடையில் சேவையை முன்னெடுக்க உள்ளது.