சுவிட்சர்லாந்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 31-ஆம் திகதியுடன் நீல ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
எனினும் சில சாரதிகள் தொடர்ந்தும் அந்த ஓட்டுனர் உரிமத்தை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் பழைய நீல நிற ஓட்டுனர் உரிமம் ரத்து பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பழைய ஓட்டுனர் உரிமத்தை பயன்படுத்துவோருக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
நீல நிற ஓட்டுநர் உரிமம் சர்வதேச தர நிர்ணயங்களுக்கும் ஐரோப்பிய தர நிர்ணயங்களுக்கும் உட்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் சுவிட்சர்லாந்து மோட்டார் போக்குவரத்து ஒன்றியம் குறித்த ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்தது.
இதன் அடிப்படையில் புதிய ஓட்டுநர் உரிமங்களை அனைத்து சாரதிகளும் பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஆயிரக்கணக்கான சாரதிகள் பழைய ஓட்டுனர் உரிமத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
பழைய ஓட்டுனர் உரிமத்தை பயன்படுத்துவோருக்கான அபராத தொகை கான்டனுக்கு கான்டன் வேறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென் கேலனில் 50 பிராங்குகளும் பேசலில் 75 பிரங்குகளும் அபராதமாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.