ஸ்பெயினின் வெலென்சியா பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட ஸ்பெயின் மன்னர் பிலிப்பி அரசி லிட்சியா ஆகியோர் விஜயம் செய்திருந்தபோது மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த அனர்த்தம் காரணமாக 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பை பார்வையிட சென்ற மன்னர் மற்றும் அரசிக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன் அவர்களை கொலையாளிகள் என மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அவர்களுடன் சென்ற பிரதமர் பெட்றோ சான்ஸே மற்றும் பிராந்திய ஆளுநர் கால்லோஸ் மாஸோன் ஆகியோருக்கும் எதிராக மக்கள் கோஷங்களை எழுப்பினர்.
சிலர் மிகவும் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி மன்னர், பிரதமர் உள்ளிட்டவர்களை திட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சிலர் முட்டைகளை வீசி எறிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்களின் இந்த எதிர்ப்பு காரணமாக மன்னர் உள்ளிட்டவர்களை பாதுகாப்பதுக்காக அழைத்துச் செல்ல பொலிஸார் கடும் பிரயத்தனம் மேற்கொள்ள நேரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரிகளின் அசமந்த போக்கு காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழக்க நேரிட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.