உலகின் பலம்பொருந்திய நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் இன்றைய தினம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகின்றது.
குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோர் பிரதான போட்டியாளர்களாக களம் காண்கின்றனர்.
குறைந்தபடம்சம் 270 தேர்தல் தொகுதிகளை வெற்றியீட்பவர் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட உள்ளார்.
இந்த தேர்தலில் அரிசோனா, ஜோர்ஜியா, மிச்சிகன், நிவேடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கொன்சின் ஆகிய மாநிலங்கள் முக்கியமானவை என தெரிவிக்கப்படுகின்றது.
கமலா ஹரிஸ் தனது இறுதி தேர்தல் பிரசாரத்தை பென்சில்வேனியாவில் மேற்கொண்டதுடன் டொனால்ட் ட்ராம்ப் மிச்சிகனில் இறுதிப் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
தமது பிரதான எதிரி கமலா ஹரிஸ் அல்ல மோசமான ஜனநாயக கட்சியின் முறைமையேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தேர்தலில் நிச்சயமாக வெற்றியீட்ட முடியும் என கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இரு வேட்பாளர்களுக்கும் இடையில் இம்முறை தேர்தலில் கடுமையான போட்டி நிலவி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.