அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்றைய தினம் நடைபெறுகின்றது.
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும் நாளாக இன்றைய நாள் கருதப்படுகின்றது.
வாக்கெடுப்பு நடைபெற்று முடிந்ததன் பின்னர் வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டித் தன்மையின் அடிப்படையில் வெற்றியாளர் யார் என்பது நிர்ணயம் செய்வதற்கும் அனுமானிப்பதற்கும் நாட்கள் அல்லது வாரங்கள் செல்லக்கூடும்.
இந்த ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை எப்போது எதிர்பார்க்கலாம்?
தற்போதைய துணை ஜனாதிபதி மற்றும் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹரிஸ் மற்றும் முன்னாள் ஜனாதிபதியும் குடியரசு கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் கடந்த சில வாரங்களாகவே கடும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இம்முறை தேர்தலை பொருத்தமட்டில் நடத்தப்பட்ட அநேகமான கருத்துக்கணிப்புகளில் வெற்றியாளர் தேர்வு என்பது மிகச் சொற்பளவு வாக்கு வித்தியாசத்தில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
பிரதான இரண்டு கட்சிகளுக்கான ஆதரவு சமமான அளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டில் தேர்தல் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இந்த ஆண்டு தேர்தலில் சில மாநிலங்களுக்கான முடிவுகள் வெளியிடுவதில் காலம் தாழ்த்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் மிச்சிகன் போன்ற மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை வேகமாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட காலத்திலவ் நடைபெற்ற கடந்த ஜனாதிபதி தேர்தலை விடவும் இம்முறை தபால் மூல வாக்களிப்பு வெகுவாக குறைவடையும்.
இதனால் தேர்தலில் வெற்றியாளர் யார் என்பதை தேர்தல் தினம் இரவு மறுநாள் காலை சில வேளைகளில் சில தினங்களில் அல்லது சில வாரங்களில் தீர்மானிக்க படக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
எனினும் நவம்பர் மாதம் 7ம் திகதி காலை வரையில் ஜோ பைடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி ஈட்டினார் என அமெரிக்க தேசிய ஊடகங்களில் தகவல் வெளியிடப்படவில்லை.
2020 தேர்தல் நடைபெற்ற போது டொனால்ட் டிரம்ப் வெற்றியீட்டக்கூடிய சாத்தியம் காணப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் கருதினர் உண்மையில் அமெரிக்காவில் 270 தேர்தலில் தொகுதிகளில் வெற்றி ஈட்டுவதன் மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட முடியும்.
இந்த கடந்த தேர்தலில் ட்ராம்ப், பைடன் ஆகிய இருவருமே மிகக் கடுமையான போட்டியில் இருந்தனர்.
அனேகமான மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் 24 மணித்தியாலத்திற்குள் வெளியிடப்பட்ட போதிலும் பென்சில்வேனியா, நெவாடா போன்ற சில மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் அவ்வளவு சீக்கிரமாக வெளியிடப்படவில்லை.
எனினும், பென்சில்வேனியாவில் பைடனுக்கான ஆதரவு அதிகரித்த காரணத்தினால் பைடன் வெற்றி ஈட்டுவாரென ஊடகங்கள் ஊகம் வெளியிட்டிருந்தன.
முதலாவதாக சர்வதேச ஊடகமான சீ.என்.என் பைடன் வெற்றியிட்டதாக அறிவித்திருந்தது. அதன் பின்னர் ஏனைய ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.
பொதுவாக எப்பொழுது ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்?
பொதுவாக வாக்காளர்கள் தேர்தல் தினம் அன்று இரவு அல்லது மறுநாள் காலை அடுத்த ஜனாதிபதி யார் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் முடிவுகள் வெளியிடப்படும்.
உதாரணமாக 2016 ஆம் ஆண்டு ட்ரம்ப் முதல் தடவையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டபோது தேர்தல் நடைபெற்ற தினத்தின் மறுநாள் அதிகாலை 3 மணியளவில் ட்ரம்ப் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டது.
2012 ஆம் ஆண்டு பரக் ஒபாமா இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போதும் அவர் தேர்தலில் போட்டியிட்ட தினத்தின் நள்ளிரவு அளவில் வெற்றியாளர் குறித்து அறிவிக்க முன்னறிவிப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தன.
2000 ஆம் ஆண்டு ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் ஜோன் கெரி ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டபோது ஓர் மாநிலத்தின் வெற்றியாளர், நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் புஷ் என அறிவிக்கப்பட்டதுடன், அந்த ஆண்டின் ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டார்.
இம்முறை தேர்தலில் பிரதானமாக கவனம் செலுத்தப்பட வேண்டிய மாநிலங்கள் எவை?
நாடு முழுவதும் கிரீனிச் நேரப்படி வாக்கெடுப்பு புதன்கிழமை அதிகாலை 5 மணி அளவில் பூர்த்தி ஆகும்.
ஹரிசோனா, ஜோர்ஜியா, மிச்சிகன், நிவேடா வடக்கு கரோலினா, பென்சில்வினியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் மிகவும் தீர்மானம் மிக்கவை என எதிர்பார்க்கப்படுகின்றது.
சில மாநிலங்களில் வாக்கெடுப்பு நடைபெற்று முடிவடையும் சந்தர்ப்பத்தில் சில மாநிலங்களின் வெற்றியாளர் யார் என்பதது குறித்த ஊகங்கள் வெளியிடப்படும்.
வாக்குகள் எவ்வாறு எண்ணப்படும்?
பொதுவாக தேர்தல் தினத்தில் அளிக்கப்பட்ட வாக்குகள் முதலில் எண்ணப்படும் அதன் பின்னர், தேர்தலுக்கு முன்னர் அளிக்கப்பட்ட வாக்குகள் மற்றும் தபால் மூல வாக்குகள் எண்ணப்படும் பின்னர் சர்ச்சைக்குரிய வாக்குகள் எண்ணப்படும், அதன் பின்னர் வெளிநாடுகளில் இருந்து வாக்களித்தவர்கள் மற்றும் ராணுவப் படையினரின் வாக்குகள் எனப்படும்.
வாக்கு சீட்டுகள் தீவிரமாக சோதனை இடப்படும் மேலும் இலத்திரனியல் ஸ்கேனர் இயந்திரங்கள் மூலம் வாக்கு என்னும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சில சந்தர்ப்பங்களில் கைகளில் எண்ணப்படுவதுடன், வாக்கு என்னும் நடவடிக்கை சரிபார்க்கப்பட்டு இரண்டு தடவைகள் அவை சோதனை இடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணுதல் தொடர்பில் பல்வேறு கடுமையான சட்ட திட்டங்கள் பின்பற்றப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் காலம் தாமதமாக காரணம் என்ன?
வேட்பாளர்கள் பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் எண்ணிக்கையில் சிறிய இடைவெளி காணப்பட்டால் வாக்குகள் மீள எனப்படும்.
உதாரணமாக பென்சில்வேனியா மாநிலத்தின் வெற்றியாளருக்கும் தோல்வி அடைந்தவருக்கும் இடையிலான இடைவெளி 0.5 வீதமாக காணப்பட்டால் அந்த வாக்குகள் தானியங்கி அடிப்படையில் மீள எண்ணப்படும், மேலும் நீதிமன்ற வழக்குகள் மூலம் சில வேளைகளில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் அடிப்படையிலும் வெற்றியாளர் குறித்து அறிவிப்பு வெளியிட காலம் தாழ்த்தப்படலாம்.
வாக்குச்சாவடிகளில் வன்முறை சம்பவங்கள் இடம் பெற்றாலும் இவ்வாறு காலம் தாழ்த்தப்படலாம்.
இம்முறை தேர்தலில் டிரம்ப் தோல்வியை தழுவினால், தேர்தல் முடிவுகள் தொடர்பில் முடிவுகளை சவாலுக்கு உட்படுத்தக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எப்போது புதிய ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்வார்?
இம்முறை தேர்தலில் வெற்றி ஈட்டும் ஜனாதிபதி எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி ஐக்கிய அமெரிக்காவின் கேப்பிட்டல் கட்டிடத் தொகுதியில், பதவிப்பிரமாணம் செய்து கொள்வார்.
ஐக்கிய அமெரிக்காவின் வரலாற்றில் 60ஆவது ஜனாதிபதி பதவி பிரமாண நிகழ்வாக இந்த நிகழ்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.