அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியின் வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியும் டொனால்ட் ட்ராம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உலகின் முன்னணி சர்வதேச ஊடகங்களில் இது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் தொடர்ச்சியாக இரண்டு தடவை ஜனாதிபதி பதவி வகிக்காது, இரண்டாவது தடவை தோல்வியை தழுவி மீண்டும் ஜனாதிபதியாகும் முதல் சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க வரலாற்றில் மிகவும் வயது முதிர்ந்த ஜனாதிபதியாக டிரம்ப் வரலாறு படைக்க உள்ளார்.
ட்ராம்பிற்கு தற்பொழுது அவருக்கு தற்பொழுது 78 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 538 ஆசனங்களில் இதுவரையில் 279 ஆசனங்களை வென்றுள்ளதுடன் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் 223 ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளார்.
இதன்படி டிரம்ப் இரண்டாவது தடவையாகவும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொள்ள உள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் இந்த பதவி பிரமாண நிகழ்வுகள் நடைபெற உள்ளன தற்போதைய வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் அடிப்படையில் கமலா ஹாரிஸை விட டொனால்ட் டிரம்ப் ஐந்து மில்லியன் வாக்குகள் முன்னிலை வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் டொனால்ட் டிரம்ப் இம்முறை தேர்தலில் போட்டியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இடைவேளை குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பிற்கு உக்ரைன் ஜனாதிபதி மற்றும் இஸ்ரேல் பிரதமர் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.