அமெரிக்காவின் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் குறித்த வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 538 தேர்தல் கல்லூரி வாக்குகளில் 270 வாக்குகள் கைப்பற்றும் வேட்பாளர் தேர்தலில் வெற்றி ஈட்டுவார்.
இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் ட்ராம்ப், 62 885 232 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார் கமலா ஹரிஸ் 58 121 694 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்.
கமலா ஹரிஸ் 182 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதுடன் டொனால்ட் டிரம்ப் 246 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றார்.
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் வட கரோலினா மாநிலத்தில் டிரம்ப் வெற்றி ஈட்டுவார் எனவும், வாஷிங்டன் மாநிலத்தில் கமலா ஹரிஸ் முன்னிலை வகிப்பதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
முக்கியமான மாநிலங்களான ஜோர்ஜியா, பென்சில்வேனியா, ஹரிசோனா, மிக்ஸிகன், விஸ்கான்சின் மற்றும் நிவேடா ஆகிய மாநிலங்களின் வாக்கு எண்ணும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த மாநிலங்களில் யார் வெற்றி ஈட்டுவார் என்பது குறித்த உறுதியான தகவல்களை இதுவரை வெளியிட முடியவில்லை.
சில தொகுதிகளில் டிரம்ப் முன்னிலை வகிக்கும் அதேவேளை, சில தொகுதிகளில் ஹரிஸ் முன்னிலை வகிக்கின்றார்.
எவ்வாறெனினும், இதுவரையில் வெளியான முடிவுகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பிற்கு கூடுதல் வெற்றி வாய்ப்பு காணப்படுகின்றது.
முக்கிய மாநிலங்களின் தேர்தல் கல்லூரி வாக்கு எண்ணிக்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்களின் அடிப்படையில் இறுதி வெற்றியாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும்.