அமெரிக்க மக்களுக்கு தாம் நன்றி பாராட்டுவதாக முன்னாள் ஜனாதிபதியும் குடியரசு கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தாம் வெற்றி ஈட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிடப்படவில்லை.
நாட்டை கட்டி எழுப்புவதற்கு இது மிக மிக முக்கியமான தருணம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் தான் அமெரிக்க மக்களுக்காக போராடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பொன்னான யுகத்தை உருவாக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஃப்ளோரிடாவில் அவர் இந்த கருத்துக்களை தமது ஆதரவாளர்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் எல்லைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை குணப்படுத்த தான் நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
இது அமெரிக்க மக்களின் மாபெரும் வெற்றி எனவும் அமெரிக்காவை முன்னிலைப்படுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.