அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ராம்ப் வெற்றியீட்டியமை சுவிட்சர்லாந்தில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரம்ப் மீண்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ட்ரம்பின் வெற்றியானது சுவிட்சர்லாந்து பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
ட்ரம்பின் தேர்தல் வெற்றி சுவிட்சர்லாந்தில் நீண்ட கால மற்றும் குறுகிய கால அடிப்படையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ரய்பிசென் வங்கியின் முதலீட்டுப் பிரிவு பொறுப்பாளர் மாத்தியாஸ் கியிஸ்புல்ஹர் இந்த விடயம் தொடர்பில் விளக்கம் அளித்துள்ளார்.
குறுகிய கால அடிப்படையில் ட்ரம்பின் வெற்றியானது சந்தை நிலைமைகளில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் எனவும் இது சுவிஸ் பொருளாதாரத்திற்கு சாதகமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ட்ரம்பின் வெற்றியானது சுவிட்சர்லாந்தின் முன்னணி மருந்துப் பொருள் நிறுவனங்களான நொவிராட்ஸ் மற்றும் ரொச்சே ஆகிய நிறுவனங்களுக்கு சாதக நிலையை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில் கமலா ஹரிஸ் வெற்றியீட்டினால் அமெரிக்காவில் மருந்துப் பொருள் விலைகளை குறைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், ட்ரம்பின் வெற்றியானது சுவிட்சர்லாந்தின் ஏற்றுமதி வர்த்தகத்தில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
ட்ரம்ப் உறுதியளித்தது போன்று இறக்குமதி பொருட்களுக்கு வரி விதித்தால் அது சுவிட்சர்லாந்து ஏற்றுமதி வர்த்தகத்தை பாதிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
ட்ரம்ப் தொடர்ச்சியாக வரி விதித்தால் அது சுவிட்சர்லாந்தின் தொழிற்சந்தையிலும் பாதக விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என எதிர்வுகூறியுள்ளார்.