அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெளிவாகக்கூடிய சாத்தியம் அதிகரித்துள்ளது.
நாட்டின் 47 ஆம் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ராம்ப் தெரிவாகுவார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகள் அடிப்படையில் ட்ராம்ப் 277 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றார்.
மறுபுறத்தில் கமலா ஹாரிஸ் 226 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றார்.
இதன்படி டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவாகக் கூடிய சாத்தியங்கள் வலுப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில் அதிகாரப்பூர்வமாக வெற்றியாளர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை.
எவ்வாறு எனும் தற்போதைய கள நிலவரங்களின் அடிப்படையில் அமெரிக்காவின் மொத்த தேர்தல் கல்லூரி தொகுதிகளான 538 இல் ட்ரம்ப் 277 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றார்.
அமெரிக்காவில் ஜனாதிபதியாக தெரிவாவதற்கு 270 தொகுதிகளில் வெற்றி ஏற்றுவது போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையில் பொதுவாக குடியரசு கட்சியின் வேட்பாளர் ட்ராம்ப் நாட்டின் 47ம் ஜனாதிபதியாக தெரிவாகும் சாத்தியங்கள் அதிகம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.