நாடாளுமன்ற ஆசனங்களுக்காக கட்சியை விட்டு சென்றவர்கள் தற்பொழுது புலம்பிக் கொண்டிருப்பதாக தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தங்களது நாடாளுமன்ற ஆசனத்தை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் கட்சியை விட்டு வெளியேறி சென்றவர்கள் இன்று கட்சி குறித்து புலம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற ஆசனங்களை பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற காரணத்தினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை முதலாவதாக உடைத்தவர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் என அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் கட்சியை விட்டு வெளியேறிய அனைவரும் கட்சியில் போட்டியிடுவதற்கு ஆசனம் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் வெளியேறியவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆசனங்களுக்காகவே இவ்வாறு கட்சியை உடைத்தார்கள் என சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.