சுவிட்சர்லாந்தின் கிளாரஸ் கான்டனில் இடம் பெற்ற விபத்தில் 93 வயதான சாரதி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் செலுத்திய வாகனம் சுமார் 80 மீட்டர் ஆழமான பள்ளத்தில் விழுந்த காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மற்றுமொரு வாகனத்திற்கு இடமளிக்க முயற்சித்த போது இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
குறித்த 93 வயது சாரதி வாகனத்திலிருந்து வீசி எறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.