சுவிட்சர்லாந்தில் சைபர் குற்றச் செயல்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சைபர் குற்றச் செயல்கள் வெகுவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்து மத்திய சைபர் பாதுகாப்பு அலுவலகம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
நாட்டில் ஒவ்வொரு எட்டரை நிமிடங்களுக்கு ஒரு தடவையும் ஒரு சைபர் குற்றச் செயல் பதிவாகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
இணைய வழி குற்றச் செயல்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
முதல் ஆறு மாத காலப் பகுதியில் 34789 சைபர் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டின் முதல் ஆண்டு காலப் பகுதியில் பதிவான சைபர் குற்றச் செயல்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்வடைந்துள்ளது.