ஈரானிய அரசாங்கம் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய திட்டமிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க நீதித் திணைக்களம் இது தொடர்பில் மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ட்ரம்பை படுகொலை செய்வதற்கு முயற்சிக்கப்பட்டதாகவும் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானிய அரசாங்கம், ஃபர்ஹாட் சகாரி என்ற நபரிடம் ட்ரம்பை படுகொலை செய்யும் சதி திட்டத்தை ஒப்படைத்திருந்தது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ட்ரம்பை கண்காணித்து அவரை படுகொலை செய்யுமாறு கோரப்பட்டிருந்தது எனவு சகாரிக்கு எதிராக அமெரிக்காவில் குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கார்லிஸ் ரிவேரா மற்றும் ஜொனதன் லோட்ஹோல்ட் என்ற இரண்டு நபர்களுக்கு எதிராகவும் ட்ரம்ப் கொலை முயற்சி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கப் பிரஜைகளுக்கு ஈரானிய அரசாங்கத்தினால் தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் நிலவி வருவதாக அமெரிக்க சட்ட மா அதிபர் மெரிக் கார்லேன்ட் மற்றும் எப்.பி.ஐ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் கிறிஸ்டோபர் வெரே ஆகியோர் தெரிவித்துள்ளனர்.