அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையின் பிரதானியாக சூசீ வில்சை நியமிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
சூசி, ட்ரம்பின் பிரசார முகாமையாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க வரலாற்றில் முதல் தடவையாக வெள்ளை மாளிகை பிரதானி பதவி இவ்வாறு பெண் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதி டிராம்ப் பல்வேறு நியமனங்களை மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் ட்ரம்ப், பதவியை பொறுப்பு ஏற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எவ்வித முரண்பாடுகளும் இன்றி ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்க தயார் என தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வெற்றியடையும் போது மட்டும் தேசத்தை நேசிக்க கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே புதிய ஜனாதிபதியிடம் ஆட்சி அதிகாரத்தை முறையாக ஒப்படைக்க தயார் என பைடன் தெரிவித்துள்ளார்.