இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய வேண்டாம் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 52 நாடுகளினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவை மற்றும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை என்பனவற்றில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
காசாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் போரின் போது பொதுமக்களை பாதுகாப்பதற்கு இஸ்ரேல் உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுமார் 52 உறுப்பு நாடுகள் கையொப்பமிட்டுள்ளன.
இதேவேளை, இஸ்ரேலியா படையினரின் தாக்குதல்கள் காரணமாக காசாவில் பட்டினி பிணி ஏற்படக்கூடிய அபாய நிலைமையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.