சுவிட்சர்லாந்திலிருந்து புறப்பட்ட விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
தொலைதொடர்பாடல் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு விமானம் அவசரசமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலிருந்து பொஸ்டன் நோக்கிப் பயணம் செய்த விமானமே அவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் பயணம் செய்த நிலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
செய்தி தொடர்பாடல் கட்டமைப்பு செயலிழந்தமையினால் இவ்வாறு அவசரமாக தரையிறக்க நேர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு தங்குமிட வசதிகளை செய்து கொடுத்து 24 மணித்தியாலங்களுக்குள் அவர்கள் மீளவும் பொஸ்டன் பயணம் செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.