நிதிச் சலவையில் ஈடுபட்டதாக இரண்டு சுவிட்சர்லாந்து பிரஜைகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஒரு மில்லியன் சுவிஸ் பிராங்குகள், 34 மில்லியன் யூரோக்கள் மற்றும் 830 கிலோகிராம் எடையுடைய தங்கம் என்பனவற்றை குறித்த இருவரும் சட்டவிரோதமான முறையில் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த இருவருக்கு எதிராகவும் சுவிட்சர்லாந்தின் நிதிச் சலவை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
56 மற்றும் 63 வயதான இருவருக்கு எதிராகவே இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் இந்த இருவருக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்து உள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஜெர்மன் போன்ற நாடுகளில் இருந்து இந்த பணமும் தங்கமும் இனம் தெரியாதவர்களிடமிருந்து சுவிட்சர்லாந்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சட்ட விரோதமான முறையில் பணத்தையும், தங்கத்தையும் நாட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலம் இருவரும் சுமார் ஐந்து லட்சம் சுவிஸ் பிராங்குகள் வருமானம் ஈட்டியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.