ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான மற்றுமொரு விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணத்தை ரத்து செய்துள்ளது.
கொழும்பிலிருந்து அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நோக்கி பயணம் செய்யவிருந்த விமான பயணம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த விமான பயணம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய நாட்களாகவே ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தொழில்நுட்ப கோளாறுகளுக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பல சந்தர்ப்பங்களில் விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.