இலங்கையில் தேர்தல் நடைபெறும் தினத்தில் சீரற்ற காலநிலையினால் பாதிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 14ம் திகதி நாடாளமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
குறித்த தினத்தில் நாட்டின் சில பகுதிகளில் கடுமையான மழை பெய்யும் சாத்தியம் உண்டு என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
குறிப்பாக சில மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் மேல் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை வரையறுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவும் அனர்த்த முகாமைத்துவ நிறுவனமும் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது