நாடாளுமன்றில் தமிழர்களின் வலுவான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தேசிய அரசியலில் எவ்வாறான மாற்றங்கள் இடம்பெற்றாலும், நாடாளுமன்றில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பலமாக இருக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலமாக உதாசீனம் செய்யப்பட்ட தமிழர்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கு தமிழர்களின் பிரதிநிதித்துவம் அவசியமமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலமாக தமிழர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுப்பதற்கு தமிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தரணியான சுமந்திரன் கடந்த இரண்டு தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.