ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான சில விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே இவ்வாறு விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் இது தொடர்பான ஊடக அரிக்கின்றது வெளியிட்டுள்ளது.
அண்மைய நாட்களில் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவ்வாறு விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டதனால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது என ஸ்ரீலங்கன் அறிவித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து இவ்வாறு விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தொழில்நுட்ப கோளாறு தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஸ்ரீலங்கன் விமான சேவையை நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளதுடன் அவர்களின் பொறுமைக்காக நன்றி பாராட்டுவதாக தெரிவித்துள்ளது.