அண்மையில் தேசிய மக்கள் சக்தியின் பொது தேர்தல் பிரச்சார கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது வெளி மாவட்டங்களில் இருந்து மக்கள் அழைத்து வரப்பட்டது ஏன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் அவர் இந்த கேள்வியை எழுப்பி உள்ளார்.
ஏனைய மாவட்டங்களில் இருந்து பஸ்களில் அதிகளவான மக்கள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகம் ஒன்றின் வாயிலாக சுமந்திரன் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி பங்கேற்ற யாழ்ப்பாணக் கூட்டத்திற்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்றனர்.
எனினும் இவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என அவர் தெரிவித்துள்ளார் .
கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் அந்தந்த மாவட்டங்களில் தங்களது பிரச்சனைகளை கூறி இருந்தால் செலவு குறைவடைந்திருக்கும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.