எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை அமைதி காலம் அமுலில் இருக்கும் எனவும், அக்காலப்பகுதியில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், வேட்பாளர்கள் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகங்களை இன்று நள்ளிரவுக்குப் பின்னர் அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.