கரீபியன் தீவு நாடான ஹெய்ட்டிக்கான விமான பயணங்களை சில விமான சேவை நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன.
பயணிகள் விமானம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு காரணமாக இவ்வாறு விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஹெய்ட்டியின் போர்ட் அயு பிரிண்ஸ் விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறக்க முயற்சிக்கப்பட்டபோது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 951 ஆம் இலக்க விமானம் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து ஹெய்ட்டிக்கு பயணம் செய்த விமானம் மீது துப்பாக்கி சூடு நடத்த ப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டு நடவடிக்கையின் பின்னர் குறித்த விமானம் டொமினிகன் குடியரசுகளில் சந்தியாகு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக விமான பணியாளர் ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
எனினும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பயணிகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.
நாட்டில் நிலவி வரும் அரசியல் பதற்ற நிலைமை காரணமாக உள்நாட்டில் கோஷ்டி மோதல்கள் அதிகரித்துள்ளன.
இவ்வாறான ஒரு பின்னணியில் சில விமான சேவை நிறுவனங்கள் ஹெய்ட்டிக்கான விமான பயணங்களை ரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.