ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற ஊறுப்பினர் எம்,ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அனுரகுமார அரசாங்கத்தில் இரண்டு அல்லது மூன்று அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டால் அரசாங்கத்தில் இணைந்து கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் தரப்பில் வழங்கப்படும் வாய்ப்புக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துவிடக் கூடாது என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கு சகல அம்சங்களுடன் காத்திரமான தீர்வுத் திட்டம் வழங்கப்பட்டால் மத்திரமே அமைச்சுப் பதவிகள் ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
சகல வழிகளிலும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டால் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுரகுமாரவிற்கு ஆதவரளித்தாலும் ஒரு அமைச்சுப் பதவி வழங்கப்படும் என சுமந்திரனுக்கு தெரியும் என இந்திய ஊடகவியலாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
அனுரகுமார அரசாங்கம் பதவி வழங்கினாலும் அது சுமந்திரனுக்கே வழங்கப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாளைய தினம் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கூடுதல் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்வதாக தமிழ் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.
பொதுவாக யாழ்ப்பாணத்தை மையமாகக்கொண்ட அரசியல் களத்தில் கிழக்கு மாகாணத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்றால்அது பிழையாகாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதற்கு முன்னதாக தமிழர்கள் நாடாளுமன்றில் அங்கம் வகிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.’
தமிழ் அரசியலின் பிதாமகராக போற்றப்படும் அமரர் சம்பந்தனினால் கடந்த நாடாளமன்றத் தேர்தலில் குறைந்தளவு வாக்குகளையே பெற்றுக்கொள்ள முடிந்தது.
வட மாகாணத்தில் இம்முறை தேர்தல் பிரசாரப் பணிகள் மிகவும் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தியின் தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெறாத சந்தர்ப்பத்தில் , வேறும் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் அரசியல் கட்சி அல்லது பொருத்தமான ஒருவருக்கு இவ்வாறு வடக்கிலிருந்து அமைச்சுப் பதவி வழங்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் விடுதலை முன்னணியைப் பொருத்தமட்டில் மலையகத் தமிழரும் தற்பொழுது வடக்கில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம் செய்யும் செய்பவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் மட்டுமே கட்சியின் வலுவான தமிழ் அரசியல்வாதியாக காணப்படுகின்றார்.
சிரேஸ்ட தலைவர்கள் என்ற வகையில் சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி ஒன்றை வழங்கக்கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.