-0.3 C
Switzerland
Monday, December 9, 2024

தேர்தலில் வாக்களிக்கும் தமிழர்கள் கவன்திற்கு…

Must Read

பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் தமிழர்கள் பொருத்தமானவர்களை தெரிவு செய்து பேரம் பேசும் உரிமையை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் முன்னொரு போதும் இல்லா அளவிற்கு அதிகரித்துள்ளது.

நாளைய தினம் இலங்கையில் பொது தேர்தல் நடைபெற உள்ளது.

நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களில் சுமார் 13400 க்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் வாக்களிப்பு நடைபெற உள்ளது.

கடந்த 76 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முதல் தடவையாக பாரிய மாற்றம் நிகழ்த்தப்பட்டிருந்தது.

வெறும் மூன்று வீத மக்கள் ஆதரவினை கொண்ட கட்சியாக அடையாளப்படுத்தப்பட்ட ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க வெற்றிஈட்டி இருந்தார்.

50வீதத்தை எட்ட முடியாவிட்டாலும் ஏனைய வேட்பாளர்களை விட கூடுதல் வாக்குகளை பெற்று அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெளிவாகி இருந்தார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் குறுகிய காலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுகின்றது.

இந்த தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் தீர்மானம் மிக்கவை என்பது கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும்.

வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் போன்ற பகுதிகளில் தமிழ் மக்கள் எவ்வாறு வாக்களிக்கின்றார்கள் என்பது இந்தத் தேர்தலில் தீர்மானம் மிக்க ஓர் ஏதுவாக அமையக்கூடும்.

குறிப்பாக வடக்கு கிழக்கில் தமிழர் பாரம்பரியத்தை அறிந்த தமிழ் மக்களுக்கு குரல் கொடுக்கக்கூடிய ஒரு கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டியது அத்தியாவசியமாகின்றது.

அதன்படி இம்முறை தேர்தலில் வீடு சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவளிப்பது காலத்தின் தேவையாக அமைந்துள்ளது.

மேலும் தேர்தல் பிரசாரத்திற்கான காலம் முடிவடைந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கு பல உத்திகளை பின்பற்றி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை இழிவுபடுத்தியும் , வேட்பாளர்களுக்கு சேறு பூசியும், வேட்பாளர்களை கிண்டல் செய்தும் பல்வேறு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான பிரசாரங்கள் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் வெகுவாக குறையக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே இம்முறை தேர்தலில் மக்கள் மிகுந்த நிதானத்துடன் சரியான தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

வடக்கை பொருத்தவரையில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் தேர்தலில் களமிறங்கியுள்ளன.

இவற்றில் பல வாக்குகளை சிதறடித்து தமிழ் மக்களின் பேரம் பேசும் உரிமையை மலினப்படுத்தக்கூடிய வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

சிங்கள மக்கள் மத்தியில் போதிய அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி அனேகமான மக்கள் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.

எனினும் தமிழர் பிரதேசங்களில் தேவையற்ற வகையில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு வாக்குகள் சிதறடிக்கப்படும் அபாய நிலை உருவாகியுள்ளது.

எனவே மக்கள் நிதானமாகவும் சிந்தித்தும் எதிர்கால சந்ததியினரின் நலனை கருத்திற் கொண்டும் தங்களது வாக்குத் தெரிவுகளை மேற்கொள்வது காலத்தின் கடப்பாடாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

ஆளுமை, சட்டம் உள்ளிட்ட பல்வேறு அறிவார்ந்த திறன்களையும் மும்மொழி ஆளுகையும் கொண்ட சுமந்திரன் போன்றவர்களின் குரல் புதிய நாடாளுமன்றில் ஓங்கி ஒலிக்கச் செய்வதன் மூலம் தமிழர்களின் பேரம் பேசும் அரசியல் உரிமைகளை மீண்டும் உறுதி செய்துகொள்ள முடியும் என்பது நிதர்சனமானது.

ஏனெனில் சுமந்திரன் போன்ற தமிழ் தேசிய ஆளுமைகளை மலினப்படுத்தும் சூட்சுமாமான சூழ்ச்சிகள் சமூக ஊடகங்களிலும் பொது வெளியிலும் தெளிவாக காண முடிகின்றது.

இனமொன்றின் குரல்களை நசுக்குவதற்கு எடுக்கப்படும் பிரயத்தனங்களை தமிழ் சமூகம் விழிப்புடன் இருந்து முறியடித்து எழுச்சி பெற வேண்டியது அவசியமானதாகும்.

கிழக்கு மாகாணத்திலும் மலையகத்திலும் தகுதியான தமிழ் ஆளுமைகளை அதிகளவில் நாடாளுமன்றில் அமரச் செய்வதன் மூலம் இந்த வரலாற்று கடமையை திறம்பட செய்ய முடியும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES