நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி முன்னணிலை வகிக்கின்றது.
இதுவரையில் வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி 75 வீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 372393
ஐக்கிய மக்கள் சக்தி 60164
புதிய ஜனநாயக முன்னணி 24656
கொழும்பு, திருகோணமலை, நுவரெலியா போன்ற பல்வேறு மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி தபால் மூல வாக்குகளில் வெற்றியை பதிவு செய்து வருகின்றது.
ஏனைய கட்சிகளை விடவும் பெரும் எண்ணிக்கையிலான வாக்கு வித்தியாசத்தில் தேசிய மக்கள் சக்தி இவ்வாறு வெற்றிகளை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.