பொதுத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த மூன்று உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஒரு பொலிஸ் உத்தியோகத்தரும் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு உத்தியோகத்தர்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
திடீர் சுகவீனம் காரணமாக இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்தூவ இந்த மரணங்கள் தொடர்பில் அறிவித்துள்ளார்.
கோப்பாய் உரும்பிராய் பாடசாலையில் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
33 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கெஸ்பேவ சிறி சஹதாம் பிக்கு ஆராயமவின் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் கடமையாற்றிய 48 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வாக்குச் சாவடி பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பெண்ணே இவ்வாறு திடீரென ஏற்பட்ட நோய் நிலைமையினால் உயிரிழந்துள்ளார்.
பிலியந்தலை பிரதேசத்தில் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு உத்தியோகத்தரும் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
57 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மூவருமே மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.