இலங்கையில் வரலாற்றில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தல் இது என தெரிவிக்கப்படுகிறது.
இம்முறை நடைபெற்ற பொது தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இந்த விடயத்தை சுட்டிக்காட்டி உள்ளன.
இன்றைய தினம் நடைபெற்ற பொது தேர்தலை கண்காணிப்பதற்காக பெரும் எண்ணிக்கையிலான கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
சர்வதேச கண்காணிப்பாளர்களும் உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்களின் கண்காணிப்பாளர்களும் இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் இன்றைய தினம் நடைபெற்ற பொது தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.