-0.3 C
Switzerland
Monday, December 9, 2024

தேசிய மக்கள் சக்தியின் வெற்றி கூறும் செய்தி என்ன

Must Read

இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமாரா திசாநாயக்க தலைமையிலான இடதுசாரி கூட்டணி நடைபெற்ற முடிந்த பொது தேர்தலில் பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

வறுமைக்கு எதிராக போராடுவதற்காகவும் ஊழல் மோசடிகளை இல்லாது ஒழிப்பதற்காகவும் மக்கள் ஆணையை வணங்குமாறு தேசிய மக்கள் சக்தி பிரசாரம் செய்திருந்தது.

அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் 225 மொத்த ஆசனங்களில் 159 ஆசனங்களை பெற்றுக் கொண்டது.

சஜித் பிரேமதாசர் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி வெறும் 40 ஆசனங்களை மட்டுமே பெற்றுக் கொண்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி அனிருகுமாரன் திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டபோது 42 வீதமான மக்களே ஆதரவாக வாக்களித்திருந்தனர் .

948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இது வரையிலான காலப்பகுதியில் ஆட்சி செய்த ஆட்சியாளர்களை நிராகரிக்கும் வகையில் மக்கள் வாக்களித்திருந்தனர்.

ஊழல் மோசடிகளை தடுக்கவும் அரசியல்வாதிகளினால் கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை மீற பெற்றுக் கொள்ளவும் பொருளாதார நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டு குறுகிய நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது.

நாட்டு மக்கள் ஆட்சியாளர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் நோக்கில் தேசிய மக்கள் சக்திக்கு கூடுதல் ஆணையை வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மக்கள் கிளர்ச்சியை தொடர்ந்து இலங்கையின் அரசியல் கட்டமைப்பில் பாரிய அடிப்படை மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான கடந்த பொதுத் தேர்தலில் 145 ஆசனங்களை பெற்றிருந்தது.

எனினும், இம்முறை தேர்தலில் வெறும் இரண்டு ஆசனங்களை மட்டுமே ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியுள்ளது.

ஊழல் மோசடிகள் காரணமாக நாட்டின் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் எதிர் நோக்கி வரும் நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதி அளித்துள்ளார்.

அனுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்தபோது மிதமிஞ்சிய அளவிலான அதிகாரத்தைக் கொண்ட நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குவது ஆபத்தானது என பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வந்தார்.

இவ்வாறான பின்னணியில் தற்பொழுது அவரது காட்சியின் கீழ் மாபெரும் அதிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த நாடாளுமன்றில் வெறும் மூன்று ஆசனங்களை கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தி இம்முறை 159 ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி நிலைமைகள், அரசியல்வாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல மோசடிகளுக்கு தண்டனை விதித்தல், சொத்துக்களை கொண்டு வருதல், சிறுபான்மை சமூகங்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் என பல்வேறு சவால்கள் இந்த அரசாங்கத்தின் எதிரில் காணப்படுகின்றது.

நன்றி aljazeera.com தமிழில் tamilnews.ch

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES