நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பலத்தை உறுதி செய்துகொண்டது.
இதுவரையில் வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தி 123 ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
மட்டக்களப்ப மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி வென்றுள்ளது.
இன்னமும் கொழும்பு மாவட்ட முடிவுகள் வெளியாகவில்லை.
தேசிய மக்கள் சக்தி இதுவரையில் 68 லட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 19 லட்சம் வாக்குகளுடன் 31 ஆசனங்களை வென்றுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி 6 ஆசனங்களை வென்றுள்ளது.