-0.3 C
Switzerland
Monday, December 9, 2024

அனுர அரசாஙக்ம் செய்ய வேண்டியது என்ன

Must Read

தேசிய மக்கள் சக்தியின் வெற்றி இலங்கையில் புதிய நம்பிக்கை ஒளி கீற்றுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் பழைய பிளவுகளை களைய உதவும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகம் ஒன்று அனுரகுமார திசாநாயக்க தலையிலான தேசிய மக்கள் சக்தியின் வெற்றி தொடர்பில் ஆய்வு நடத்தியுள்ளது.

இலங்கை வரலாற்றில் தேசிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நாடாளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றிக்கு தமிழ் மற்றும் முஸ்லிம்கள் பங்களிப்பு வழங்கியுள்ளனர்.

இந்த வெற்றியின் பின்னர் ஜனாதிபதியினால் வழங்கிய உறுதி மொழிகள் நிறைவேற்றப்பட முடியுமா என சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

கோவிட் காலத்தில் முஸ்லிம் மக்களின் சடலங்கள் அவர்களின் மத நம்பிக்கைக்கு புறம்பான வகையில் தகனம் செய்யப்பட்டிருந்தது.

முஸ்லிம்களின் சடலங்கள் தகனம் செய்யப்பட்டமை ராஜபக்ச குடும்பம் மீது கடுமையான எதிர்ப்பையும் அதிருப்தியையும் முஸ்லிம் மக்களில் மத்தியில் ஏற்படுத்துகிறது.

இவ்வாறான இன ரீதியான முரண்பாட்டு நிலைமைகளுக்கு அனுர அரசாங்கம் தீர்வு வழங்கும் எனவும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் எனவும் முஸ்லிம் சமூகத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

தங்களது உறவினர்கள் கோவிட் காரணமாக உயிரிழந்த போது அவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டமைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என முஸ்லிம் சமூகத்தினர் விரும்புகின்றனர்.

அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களை பெற்றுக் கொண்டது பழைய அரசியல் கலாச்சாரத்தை களைந்து புதிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என மக்கள் விரும்பி வாக்களித்துள்ளனர் என கொழும்பு மாவட்டத்தில் வெற்றி ஈட்டிய தேசிய மக்கள் சக்தியின் சமனலி குணசிங்க தெரிவிக்கின்றார்.

1977 ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் ஒரு அரசியல் கட்சிக்கு முதல் தடவையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டின் அரசியல் அமைப்பில் மாற்றம் செய்து அனைத்து இன மக்களுக்கும் நலன்களை வழங்கக்கூடிய நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை சமூகத்தின் விருப்பு வெறுப்புக்களை புரிந்து கொண்டு மக்கள் வழங்கிய ஆணையை உரிய முறையில் பயன்படுத்துவதனால் அரசாங்கம் ஆட்சியில் நீடிக்க முடியும் என சர்வதேச ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

நன்றி : அல்ஜசீரா

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES