ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளைய தினம் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளது.
கடந்த 14ம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி ஈட்டியதன் பின்னர் புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நாளை முற்பகல் 10 மணிக்கு பதவிப்பிரமாண நிகழ்வு நடைபெற உள்ளது.
அமைச்சரவை 25 அமைச்சர்களுக்கு வரையறுக்கப்படும் எனவும் சில அமைச்சுகளுக்கு பிரதியமைச்சர்கள் நியமிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் நியாயம் வழங்கும் வகையில் அமைச்சரவை நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சு பொறுப்புகள் வழங்கப்படும் போது துறை சார் அறிவு குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என அரசாங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்த பதவி பிரமாண நிகழ்வுகள் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.