இலங்கையின் புதிய அமைச்சர்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வு, ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
மொத்தமாக 21 அமைச்சர்கள் இன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
அமைச்சர்களின் விபரங்கள் வருமாறு
பிரதமர், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்முறை கல்வி – ஹரினி அமசூரிய
வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா – விஜித ஹேரத்
அரச நிர்வாகம், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சிசபைகள் – சந்தன அபேரத்ன
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு – ஹர்ஷணநாயக்கார
பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரம் – சரோஜா சாவித்ரி போல்ராஜ்
விவசாயம், நீர்ப்பாசனம், காணி மற்றும் கால்நடைவளம் – கே.டி. லால் காந்த
நகர அபிவிருத்தி, கட்டுமான மற்றும் வீடமைப்பு – அனுர கருணாதில
மீன்பிடி, நீரியல் வளம் – ராமலிங்கம் சந்திரசேகர்
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு, சமூக வலுவூட்டல் – உபாலி பன்னிலகே
தொழிற்சாலை மற்றும் முயற்சியான்மை – சுனில் ஹதுனெத்தி
பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் – ஆனந்த விஜயபால
போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுக, சிவில் விமான சேவை – பிமல் இரத்நாயக்க
புத்த சாசனம், சமய விவகாரம் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் – ஹினிதும சுனில் செனெவி
சுகாதார மற்றும் ஊடகம் – நலிந்த ஜெயதிஸ்ஸ
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டுமான வசதிகள் – சமந்த வித்யாரத்ன
இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு – சுனில் குமார கமகே
வணிகம், கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு – வசந்த சமரசிங்க
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம் – க்ரிஷாந்த அபேசேன
தொழிலாளர் – அனில் ஜெயந்த
எரிசக்தி – குமார ஜெயக்கொடி
சுற்றுச்சூழல் – தம்மிக்க பட்டபெந்தி