சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகமொன்றில் இனக்குரோத நடவடிக்கை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Federal Polytechnic Institute in Lausanne (EPFL) பல்கலைக்கழகத்தின் மாணவர்களும் பணியாளர்களும் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.
யூத மதத்தவர்களுக்கும், இஸ்ரேலியப் பிரஜைகளுக்கும் எதிராக பல்வேறு இனக்குரோத நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இஸ்ரேலுக்கும் காசாவிற்கும் இடையிலான மோதல்கள் ஆரம்பமானது முதல் இவ்வாறு இனக்குரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இனக்குரோத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனக் கோரி பல்கலைக்கழக மாணவர்களும், பணியாளர்களும் கடிதமொன்றையும் வழங்கியுள்ளனர்.
பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இந்த கடிதம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பல்கலைக்கழகத்தினை பலஸ்தீன ஆதரவு தரப்புக்கள் நடத்தி வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.